பாடசாலை வரலாறு
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் கூலி ஆட்களாக கொண்டுவரப்பட்ட தென்னிந்திய தமிழர்கள் தோட்ட தொழிலாளர்களாக தேயிலை கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்களின் பிள்ளைகள் தேயிலை கன்றுகளை பிடுங்கி நாசப்படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தினால் அவர்களை பிள்ளை மடுவங்களை அமைத்து அவற்றில் பிள்ளைகளை பராமரித்து வந்தனர்.
இக்குழந்தைகளை வெறுமனே வைத்திருக்க முடியாத நிலையில் அவர்களுக்கு சில வகையான கல்வி புகட்டப்பட்டது. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட கல்வி கூட்டங்களில் ஒன்றுதான் பழைய ஸ்டோர் பாடசாலை கட்டிடம். இது பாடசாலையாக 1938 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியராக தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட திரு.சூசை முத்து என்பவர் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக கடமை ஆற்றினார்.இவருக்கு தோற்று நிர்வாகமே வேதனம் வழங்கியது.தொடர்ந்து இவர் 1948 ஆம் ஆண்டு வரை சேவை செய்துவிட்டு தமிழகம் சென்றார். அதன் பின்னர் திரு பொன்னையா ஆசிரியர் இப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வந்தார். அதன் பின்னர் ஆங்கில மொழி ஆசிரியரான இவர் 1956 ஆம் ஆண்டு வரையும் இப்பாடசாலையில் சேவை செய்தார் அதன் பின்னர் ஆங்கிலத் துறையாக இருந்த 110 அவர்கள் கேரளாவில் இருந்து திரு பிரதாப் சிங் என்பவரை கொண்டு வந்து தரம் ஒன்று தொடக்கம் 5 வரை முழு நேர பாடசாலையாக தரம் உயர்த்தினார். இவரும் 1956 ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை சேவையாற்றினர்.
அத்தோடு 1967-ம் ஆண்டு மீண்டும் கேரளாவிற்கு சென்றுவிட்டார். பின்னர் 1968 ஆம் ஆண்டு திரு அப்பாதுரை என்ற ஆசிரியரும் அவரின் பாதியாரும் இப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வந்தனர். அவர்களின் வருகைக்குப் பின்னர் தான் சைவ சமய பாடம் கற்பிக்கப்பட்டது. ஏனெனில் அதற்கு முன்னர் இருந்தவர்கள் கிறிஸ்தவ ஆசிரியர்களே ஆங்கிலத் துறை மார் நியமனம் கொடுத்தமையினால் அங்கு சைவ சமயம் குழிதோண்டி புதைக்கப்பட்டது. ஆங்கில கிறிஸ்தவ பாதிரிமார்கள் வந்து மாணவர்கள் மத்தியில் கிறிஸ்தவ மதத்தையே போதித்த காலகட்டமாக கருதப்பட்டது. இவரின் வருகையால் கல்வி செயற்பாடுகள் ஓரளவு நடைபெற்றனர். அதன் பின்னர் திரு சுந்தரலிங்கம் அதிபர் திரு அபூபக்கர் திரு சகாதேவநதிபர் திரு கண்ணன் அதிபர் போன்றோர் அரசாங்க நியமனம் பெற்று இப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வந்தார்கள். திரு எஸ் தியாகசுந்தரம் இப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வந்தார்கள். இவரின் வித்யாலயம் என்று தலை நிமிர்ந்து காணப்படும் கல்விக்கூடம் ஆகும்.
இவரது அயராத உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை விட சமைத்துக் எடுக்கப்பட்டது என்பதே சாலப்பொருந்தும் இன்று ஐந்து கட்டிடங்களும் பெரிய விளையாட்டு மைதானம் அழகிய சூழல் தரம் 1 தொடக்கம் 11 வரை வகுப்புகளும் கற்பித்தல் செயல்பாடுகளுக்கான உபகரணங்கள், அச்சு இயந்திரங்கள், கணினிகள் அதற்கான அறை போன்ற பல்வேறு பகுதிக வளங்களோடு வளம் பெற்று வருகின்றது. அத்தோடு நூலகம் மற்றும் குடிநீர் வசதிகள் பல்வேறு சூழல்சார் சிறப்பம்சங்கள் எடுத்தே இயம்புகின்றது. அதனை விட 2006 ஆம் ஆண்டு முதல் சிறந்த கற்றல் சூழல் கொண்ட பிள்ளை நேய பாடசாலை விருதுகள் தேசிய உற்பத்தி திறன் செயலக பரிசுகளையும் பெற்று வந்துள்ளது. பல்வேறு அபிவிருத்தி செயல்பாடுகளின் மத்தியிலும் பரீட்சை பெறுபவர்களையும் சிறந்த முறையில் வெளியிட்டு வருகின்றது. அதிபரின் சிறப்பான சேவையை பாராட்டி பல்வேறு வடக்கு கிழக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் தரிசித்து செல்கின்றனர். தற்பொழுது அதிபர் திரு. மகேஸ்வரன் தலைமையில் பல வெற்றிகளோடு பாடசாலை சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.